காவிரி நீர் வழக்கு:வழக்கின் பின்னணி என்ன?உங்களுக்காக சிறு துளிகள் இதோ ..

உச்சநீதிமன்றம் இன்று காவிரி விவகாரத்தில், உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு, கடந்து வந்த பாதை உங்களுக்காக..

2018 பிப்ரவரி 16-ம் தேதி, காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியானது. அதில், ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பக்கப்பட்டது.

மார்ச் 30-ம் தேதி, உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்தது.

இதையடுத்து, மார்ச் 31-ம் தேதி, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மூன்று மாத கால அவகாசம் தேவை என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

மேலும், ஸ்கீம் என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கத்தை உச்சநீதிமன்றம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதனிடையே, ஏப்ரல் 1- ம் தேதி, தமிழகம் எங்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின.

ஏப்ரல் 3-ம் தேதி, அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, ஏப்ரல் 5-ம் தேதி, திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.

ஏப்ரல் 7-ம் தேதி, திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

ஏப்ரல் 9-ம் தேதி, மே 3- ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த  வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல்   செய்ய வேண்டும், என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 12-ம் தேதி, தமிழகம் வந்த பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உட்பட பல்வேறு அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி  போராட்டம் நடத்தினர்.

ஏப்ரல் 13-ம் தேதி, காவிரி பிரச்னைக்காக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய உறவினர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஏப்ரல் 22-ம் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டவிரோதமானது என, பிரதமர் மோடிக்கு  கர்நாடக  முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார்.

ஏப்ரல் 24-ம் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக, தோழமை கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தின.

ஏப்ரல் 27-ம் தேதி, உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த, மேலும் 2 வாரகால அவகாசம் கோரி , மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

ஏப்ரல் 25 முதல் 5  நாட்களுக்கு, காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 30-ம் தேதி, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மே 3-ம் தேதி, பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், வரைவு திட்டம் சமர்ப்பிக்க மேலும் அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மே 3-ம் தேதி, தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்  என உச்சதீதிமன்றம் உத்தரவிட்டது.

மே 8-ம் தேதி, கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால், காவிரி நீரை திறக்க முடியாது கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிடட்து.

மே 8-ம் தேதி, அடுத்த விசாரணையின் போது, மத்திய நீர்வளத் துறையின் செயலாளர் வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், காவிரி வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்யும், என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment