” காலா ” பட வெற்றியை கொண்டாடும் படக்குழு..!

காலா (Kaala): 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ்.

Image result for காலாஇந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பானது 2016 ஆம் ஆண்டில் வெளியானது. ஏப்ரல் 27, 2018 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்கத்தின் போராட்டத்தின் காரணமாகவும், காவிரி ஆற்று நீருக்கான போராட்டம் ஆகிய காரணங்களினாலும் இந்தத் திரைப்படம் ஜூன்  7, 2018 அன்று வெளியானது.சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமை பெற்றது.

Image result for காலாகாலா படத்தில் “என்ன உனக்கு அவ்ளோ பிடிக்குமா ?” எனக் கேட்கும் நாயகியிடம் ., ” ரொம்ப இப்ப வரைக்கும் …. ” என பதில் அளிக்கும் ரொமான்ஸ் ரஜினியில் தொடங்கி ., “சட்டத்தை பத்தி எங்கிட்ட பேசுறீயா ? எங்களுக்கு சட்டத்தை மதிக்கவும் தெரியும். மதிக்காதவங்களை தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்… ” என வசனம் பேசி நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பர் ரஜினிகாந்த் .

இந்த படம் வெளியாகி 5 வரங்களைக் கடந்துள்ளதால் அதற்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டது படக்குழு.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment