கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு – நாளை முதல் அமல்

சுப்ரிம் கோட்டின் உத்தரவை தொடர்ந்து கார், இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை நாளை முதல் அதிகரிக்கிறது. இது தொடர்பாக இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 
மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். சுப்ரிம் கோர்ட் உத்தரவின்படி, நாளை முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது.
இந்த நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கார்களை பொறுத்தவரை 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை 5 ஆண்டுகளாகவும் இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment