கார் உலகின் கதாநாயகனின் புதிய வரவு… நான்காம் தலைமுறை வரவை சந்தையில் இறக்கியது…

கார் உலகின் கதாநாயகனின் புதிய வரவு… நான்காம் தலைமுறை வரவை சந்தையில் இறக்கியது…

அகில உலகிலும் கார் சந்தையில் ஆடி கார் மக்கள் மனதில் ஆழ்ந்து இன்றளவும் நிறைந்துள்ளது. இந்த வரிசையில், தற்போது ஆடி ஏ 8 எல் என்ற  சொகுசு கார் பிரிவில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த புதிய காரானது தற்போது அறிமுகம் செய்துள்ளது.இதன் சிறப்பம்சங்களான,

  • இது 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி 6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.
  • இதில் 8 ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது.
  • இதன் என்ஜின் 340 ஹெச்.பி. திறன் மற்றும்
  • 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.
  • ஸ்டார்ட் செய்து 5.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும்
  • இதில் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் உள்ளது.
  • இதில் 10 ஏ.ஹெச். லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.
  • இந்த பேட்டரி திறன் காரின் பெட்ரோல் என்ஜின் நிறுத்தப்பட்டால் 55 கி.மீ. முதல் 160 கி.மீ. வரை செல்வதற்கு உதவும். இத்தகைய தொழில்நுட்பம் எரிபொருள் சேமிப்புக்கு மிகவும் உதவும்.
  • இது 5,302 மி.மீ. நீளம், 1,945 மி.மீ. அகலம், 1,488 மி.மீ. உயரம் கொண்டது.
  • இதன் உள்புற தோற்றம் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டதோடு, சொகுசான பயணத்தையும் உறுதி செய்வதாக உள்ளது.
  • இதில் 1920 வாட் திறன்கொண்ட 23 ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது.
  • பாதுகாப்பு அம்சமாக 8 ஏர் பேக்குகள்
  •  ஏ.பி.எஸ். டிராக்‌ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சரவுண்ட் வியூ கேமரா ஆகிய வசதிகளும் உள்ளன.
  • முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube