கன்னியாகுமரி, தாணுமாலயன் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…!!

கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலயன் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி திருக்கோவில், சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சியளிக்கும் கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆகம முறைப்படி கேரளா பாரம்பரிய மேள தாளங்களுடன் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டும் இன்றி கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மக்கள்மார் சந்திப்பு வரும் 16-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் வரும் 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment