எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளின் ஊக்கத்தொகை திட்டம் கைவிடல்-மத்திய அரசு

வரும் கல்வி ஆண்டு முதல் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையினை மத்திய அரசு கைவிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் படி 8-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3000 அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை வரும் கல்வி ஆண்டு முதல் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்திருக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 70,000 மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment