உலக புகழ்பெற்ற சிதம்பர நடராஜர் ஆருத்ர தரிதனம்..! டிச.14 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..!!

உலக புகழ்பெற்ற சிதம்பர நடராஜ ஆருத்ரா தரிசனம் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 23-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற சிதம்பர நடராஜர் கோவிலி ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும் மாதங்களிலே புனிதமான மாதமான மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் இந்த கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திருவிழாக்களிலும்  மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குகிறார்.
இந்நிலையில் சிதம்பர நடராஜர் கோவிலில் இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசனவிழாவானது வருகிற 14 தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் அன்று அதிகாலையிலே சிதம்பர கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்கார காட்சியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
Related image
மேலும் கொடியேற்றமானது சரியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டுகிறது.பின்னர் இரவு தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வருகிறார்கள் மேலும் தொடர்ந்து 15 தேதி முதல் 21-ந்தேதி வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ர தரிசனம் வரும் 23 தேதி வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.

author avatar
kavitha

Leave a Comment