உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!! இணையதள சேவையில் அடுத்த அதிரடி …!!! மாஸ் காட்டி தெறிக்க விட்ட சீனா…!!!

தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும்  தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 4ஜி தொடங்கி தற்போது 5ஜி என தனது எல்லையை பரப்பிக்கொண்டுவரும் இந்த சுழலில் இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது.
Related image
ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.
Image result for 5G NETWORK
இந்த பகுதி  முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது மற்றும்  சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகாம் நிறுவனம்  சோதனை செய்து வருகிறது.மேலும் சோதனைகளில் இசட்.டி.இ. 5ஜி என்ட்-டு-என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க், கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலிஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவையும் இதில்  அடங்கும்.
Image result for 5G NETWORK
இதுதவிர இந்த சோதனைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் உலகின் முதல் 5 ஜி சேவையை  சீன நிறுவனம் முதலில் துவங்கி சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU.
author avatar
Kaliraj

Leave a Comment