உடலை பிட்னெஸ் ஆக்க வெளிநாடு செல்லும் ராகுல்காந்தி இந்திய மரபை பாராட்ட மாட்டார்; பா.ஜ.க. கண்டனம்..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் பிட்னெஸ் சவாலை (உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது) ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி, யோகா மற்றும் பிற உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க ஒவ்வொரு இந்தியரும் நாளின் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இப்தார் விருந்து வைத்த பின் பேசும்பொழுது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லாதபொழுது, உடற்பயிற்சி பற்றிய வீடியோ வெளியிடுவது பி என பேசினார்.

இந்நிலையில், மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் அவர் (ராகுல் காந்தி) பாராட்டமாட்டார்.  ராகுல் காந்தி தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதற்காக வெளிநாடு செல்வது வழக்கம்.

அதனால் இந்தியாவில் மற்றும் இந்திய மரபின்படி உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க சிலர் மேற்கொள்ளும் முக்கியத்துவம் பெற்ற விசயங்களை அவர் பாராட்டமாட்டார் என கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment