உங்கள் மரணத்தை கணிக்கும் கூகிளின் புதிய செயலி..!

கூகுளின் செயற்கை அறிவு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரி்ன் ஆயுளை , மரணம் ஏற்பட போகும் காலத்தை ஏறத்தாழ சரியாக கண்டுபிடிக்க முடியும் என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உயிருக்குப் போராடிய ஒருவரின் நுரையீரலில் இருந்து திரவத்தை எடுத்து செயற்கை அறிவு தொழில்நுட்பத்துடன் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர் உயிரோடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் 9.3 சதவீதம் இருப்பது கணிக்கப்பட்டது. இதுபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 639 பேரின் மருத்துவ அறிக்கைப் பட்டியலுடன் ஒப்பிட்டு இந்த முடிவை அறிவித்தது கூகுள் செயற்கை அறிவு நுட்பம். 95 சதவீத அளவில் இந்த தகவல் துல்லியமாக இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவ நிறுவனம் கூறி உள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment