இலங்கையின் 5 வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கே..!!

இலங்கையின் 5 வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கே..!!

இலங்கை பிரதமராக ராஜ நடையுடன் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே  பதவியேற்றுக் கொண்டார் .

தனக்கு எதிராக நிகழ்ந்த சதிகளை முறியடித்து மீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் வீக்ரமசின்ங்கே இன்று பதவி ஏற்றுகொண்டுள்ளார்.இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில்  உச்ச நீதிமன்ற உத்தரவானது மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஒரே நாளில் அதிரடியாக பிரமராக இருந்த ரணில் நீக்கப்பட்டு  மஹிந்த ராஜபக்சே பிரதமராக அந்நாட்டின் அதிபராக உள்ள சிரிசேனா உத்தரவிட்டு பதவி பிரமானம் செய்து வைத்து பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்.இந்நிலையில் தனது பதவியை இந்த தீர்ப்பிற்கு பிறகு அவர் ராஜினாமா செய்துள்ளார்.
Related image
ரணிலின் அதிரடி நீக்கம் ராஜபக்சேவின் அதிரடி பதவியேற்பு என்று பிரதமர் பதவி விவகாரத்தில்   ராஜபக்சே பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி அது செல்லாது இதனை அதிரடியாக நீக்கப்பட்ட ரணில் நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என்று நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்த நிலையில் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
Related image
இதன்பின்னர் இலங்கை நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் இதில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது மட்டுமல்லாமல் அந்த வாக்கெடுப்பில் ராஜபக்சே கடுமையான படுதோல்வி அடைந்து உடனே வெளியேறினார்.இதனால் சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்ட அறிவிப்பை அந்நாட்டின் அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் உடனே நாடாளுமன்றத்தை கலைத்த அதிர் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அன்று நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற கட்சிகள் அதிபர் சிறிசேனாவின்அறிவிப்பை எதிர்த்து அதனை ரத்து செய்யக்கோரிஅந்நாட்டில் பெரும்பான்மை பலமிக்க மூன்று முக்கிய பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த  மனுக்களை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள் நாடாளுமன்றத்தை அதிபர்  கலைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக இலங்கை அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்வதாக  உத்தரவிட்டது.

அது மட்டுமல்லாமல் அதிபரின் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் (ஜனவரி 5) ஆம் தேதி  நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தன் வகுத்த வியூகங்கள் எல்லாம் சுக்கு நூறாக நொருங்கியதை அடுத்து இலங்கை பிரதமராக பதவியேற ராஜபக்சே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அவர் பதவி விலகியதை அடுத்து  இலங்கை பிரதமராக ஏற்கனவே பதவி வகுத்த ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்கிறார்.என தகவல்கள் தெரிவித்த நிலையில் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுகொண்டுள்ளார்.

இலங்கை பிரதமராக 5வது முறையாக பதவியேற்றார். ரனில் விக்ரமசிங்கேவிற்கு  கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதனால் இலங்கையில் 51 நாட்கள் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு ஒரு தீர்வுக்கு வந்துள்ளது.
 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *