இலங்கையின் கொடுமை: "8 மீனவர்கள் ,ரூ 60,00,000 அபராதம்"குடும்பத்தினர் கண்ணீர்..!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக, 8 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களுக்கும் இதுவரை 5 முறை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கல்பிட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, 8 மீனவர்களும் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் குடும்பத்தினர், அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment