இருமலை துரத்தும் துளசி விதை

துளசி  செடி மூலிகை வகைகளில் ஒன்று. இது இன்றைய காலகட்டத்தில் சில வீடுகளில் மட்டுமே காண முடிகிறது. இந்த தலைமுறையினர் இதுபோன்ற மூலிகை செடிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே இவை வீடுகளில் வளர்க்கபடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது வருகின்ற நோய்களுக்கு ஆங்கில மருத்துவதியே நாடுகின்றனர் . மூலிகை மருத்துவ முறையை சிலர் மட்டுமே நாடுகின்றனர்.
துளசி செடி உடல் நலம் சார்ந்த நோய்களை  குணப்படுத்துவதில் சிறந்தது . துளசி மூலிகையில் ஓரியாண்டின் மற்றும் விசேயின் பாலிபினாலிக் பிளவனாயிடுகள் உள்ளது.

துளசி இல்லை உடல் நலம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கின்றது. இந்த மூலிகை மிக குறைந்த கொழுப்பு சத்துக்கள் மற்றும் கலோரி வகைகளை கொண்டுள்ளது . இதில் பல ஊட்டச்சத்துக்களான தாதுக்கள் மற்றும்  சுகாதாரத்துக்கு தேவையான வைட்டமின்களும் உள்ளது. துளசி விதை காய்ச்சல் மற்றும் குளிர் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கின்றது . துளசி இருமல் தொல்லையை போக்குவதில் மிக சிறந்த மூலிகை ஆகும். பொதுவாக துளசி இருமலுக்கும், குழந்தைகளின் சளி தொல்லையை போக்குவதற்கும் சிறந்தது.

துளசி விதையின் மருத்துவ நன்மைகள் : 

  • துளசி விதை வலிப்பு நோயை குணப்பட்டுப்படுத்தும் மருந்துகளின் பயன்களை கொண்டது.
  • இது கக்குவன் இருமல் போன்ற சிகிச்சைக்கு நல்ல தீர்வினை அளிக்கின்றது.
  • துளசி விதை வயிற்று கோளாறு பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது .
  • அடிக்கடி ஏற்படும் வயிற்று பசியை தடுத்து, உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
  • சுவாச தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது .
  • தோல் நோய் தொற்றுகள், புண்கள் போன்றவற்றிற்கு துளசி எண்ணெய் மிகவும் பயனுள்ளது ஆகும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment