இன்று ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்…!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.அதனைக் குறித்து காண்போம்.

கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி – பங்கேற்கும் தலைவர்கள்:

இந்நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.அதன்படி,போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பான் அரசர் நருகிடோ,பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடென், மங்கோலிய பிரதமர் லுவ்சன்னாம்ஸ்ராய் ஓயுன்-எர்டேன் உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.எனினும்,கொரோனா பரவல் காரணமாக முக்கிய தலைவர்களில் சிலர் மட்டுமே பங்கேற்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,தொடக்க நிகழ்ச்சி முதலாக எந்தவொரு போட்டியையும் காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.இதன்காரணமாக,அவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போட்டியில் கலந்து கொள்ளும் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

தொடக்க விழா நேரம்:

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழா இன்று மாலை 4:30 மணிக்கு ஜப்பான் தேசிய அரங்கத்தில் தொடங்குகிறது.

ஒளிபரப்பு:

டோக்கியோ ஒலிம்பிக்கின் திறப்பு விழா சோனி டென் 1 எச்டி / எஸ்டி, சோனி டென் 2 எச்டி / எஸ்டி ஆகியவற்றில் ஆங்கில வர்ணனையுடன்,இந்தி வர்ணனை சோனி டென் 3 எச்டி / எஸ்டியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.மேலும்,தூர்தர்ஷன் இந்தியாவில் விழாவை நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.

தமிழக வீரர்கள்:

  • டேபிள் டென்னிஸ் – ஷரத் கமல்,மாணிக்க பத்ரா,சத்தியன் ஞானசேகரன்.
  • படகு போட்டி -அசோக் தாக்கர் & கே.சி. கணபதி,நேத்ரா குமனன்.
  • ஃபென்சிங் – சி.ஏ.பவானி தேவி.
  • தடகளம்  – ராஜீவ் அரோக்கியா,தனலட்சுமி சேகர்,வி ரேவதி,சுபா வெங்கடேஷ் மற்றும் நாகநாதன் பாண்டி ஆகிய தமிழக விளையாட்டு வீரர்கள் உள்பட இந்திய அணி சார்பாக மேரிகோம்,பி.வி சிந்து போன்ற மொத்தம் 115 விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர்.