இந்த படம் கலர் புல்லா ஜாலியான படம் : நடிகர் விஜய்

  • நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • படம் கலர்புல்லா ஜாலியான படமாக உருவாகி வருகிறது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்று, சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்க்கார் படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இதனையடுத்து சர்க்கார் படத்தினை தொடர்ந்து தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இவர் கோச்சராக நடித்துள்ளார்.

மேலும் இப்படம் குறித்து நடிகர் விஜய், வெற்றி தியேட்டரின் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மெர்சல், சர்கார் போன்ற படங்களில் மைக் புடிச்சு பேசி பேசி எனக்கே போர் அடிச்சு போச்சு. இந்த படம் கலர்புல்லா ஜாலியான படமாக உருவாகி வருகிறது என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment