இந்த இடத்தில் மெர்சலை கூட நெருங்க முடியாத சூப்பர் ஸ்டாரின் 2.O!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவரது படங்கள் வெளிவருகிறது என்றாலே அன்றய தினம் அவரின் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அவரின் படங்கள் தமிழகத்தில் எந்தளவிற்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு கேரளாவிலும் கெண்டாடபப்டும். அங்கு அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கேரளாவில் முதல் நாள் மட்டும் 5.62 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இது மற்ற மொழி படங்கள் கேரளாவில் வெளியாகி பெற்ற வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் பிரமாண்டமாக வெளியான 2.O திரைப்படம் கேரளாவிலும் வெளியானது. ஆனால் இதன் முதல் நாள் வசூல் 4.15 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது. இந்த முதல் நாள் வசூலில் முதலிடத்தில்  5.62 கோடி வசூலுடன் சர்காரும், இரண்டாம் இடத்தில் 5.45 கோடி வசூலுடன் பாகுபலி 2படமும், மெர்சல் 4.65 கோடி வசூலுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. ஆதலால் இந்த முதல் நாள் வசூலில் 2.O நான்காம் இடத்தையே பிடித்துள்ளது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment