இந்திய கிரிக்கெட் வீரர்  முகமது ஷமியின் செல்போன்   போலீசார் பறிமுதல்?

கொல்கத்தா  போலீசார்  முகமது ஷமியின் அலைபேசியை பறிமுதல் செய்தனர்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹாசின் ஜஹான். தனது கணவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவித்த இவர், கொல்கத்தாபோலீசில் வழக்கு பதிந்துள்ளார். இதுகுறித்து விசாரித்து வரும் கோல்கட்டா போலீசார், முகமது ஷமியின் அலைபேசியை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தவிர, தென் ஆப்ரிக்க தொடர் முடிந்ததும் ஷமி துபாய் சென்றாரா என்பது குறித்து விளக்கம் தருமாறு இந்திய கிரிக்கெட் போர்டிடம், போலீசார் கேட்டுள்ளனர். இதனிடையே, ஷமி மனைவி ஹாசின் ஜஹான் மீது புதிய குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. கொல்கத்தாவில் இவரை பின் தொடர்ந்து சென்ற பத்திரிகையாளர் ஒருவரை தாக்கி, அவரது கேமராவை சேதப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும், இதில், ‘ ஹாசின் ஜஹான் யாரோ ஒருவரை விரட்டிச் செல்வது போலவும், காரில் உட்கார்ந்திருக்கும் பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்வது, போன்று தான் உள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது போன்று எதுவும் இல்லை. மிஸ் யூ பேபி தனது மகள் போட்டோவை ‘டுவிட்டரில்’ வெளியிட்ட ஷமி, ‘ ‘மிஸ் யூ பேபி,’ என, உருக்கமாக கூறியுள்ளார். மற்றொரு செய்தியில், ‘இவ்விஷயத்தில் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment