இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின்,சேவாக் ஒரு சகாப்தம்..!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் இந்தியாவிற்காக தொடக்க வீரர்களாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்- சேவாக் ஜோடி என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். பவுண்டரிகள் விரட்டி பந்து வீச்சாளர்களை சங்கடத்திற்குள்ளாக்குவதில் சச்சின் கில்லாடி.

இருவரும் 10 ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணிக்கு அது பரிதாபமே. இந்த ஜோடி இந்தியவின் தலைசிறந்த ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ‘வாட் தி டக் 3 (What the Duck 3)’ தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது சேவாக் இந்திய அணியில் இணையும் போது நடந்தது என்ன? என்பதை இருவரும் நினைவு கூர்ந்தனர். சேவாக் அணிக்குள் நுழைந்த போது நடந்த சம்பவம் குறித்து சச்சின் கூறுகையில் ‘‘சேவாக் அணியில் நுழைந்தபோது அந்த சம்பவத்தை நான் நினைத்து பார்க்கிறேன். அப்போது சேவாக் என்னிடம் பேசமாட்டார். இருவரும் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டுமென்றால், சேவாக்கை அதற்கு ஏற்றபடி தயார்படுத்த வேண்டியது அவசியம்.

இதற்கு நாம் ஒருவருக்கொருவர் பேச வேண்டும். இல்லையென்றால், வேலைக்காகாது என்று நானை நினைத்தேன். ஆகவே, நான் அவரிடம் வாங்கள் சாப்பிட போகலாம் என்றேன். சாப்பிட செல்லும்முன் நான் அவரிடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்றேன். அதற்கு அவர் பாஜி (Paaji), நான் சைவம் என்றார். நான் எதற்கு என்று கேட்டபோது, வீட்டில் உள்ளவர்கள் சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று விவரித்தார்’’ என்று சிரித்தபடியே சச்சின் தெண்டுல்கர் கூறினார்.

சேவாக் கூறுகையில் ‘‘நான் முதன்முறையாக சச்சினை சந்தித்த போது, என்னுடன் சற்று கைக்குழுக்கி விட்டு சென்றுவிட்டார். அப்போது, தன்னுடைய கிரிக்கெட் ஆசைக்கு முன்னோடியே சச்சின் தெண்டுல்கர்தான். அவரே சற்று கைக்குழுக்கிவிட்டு சென்று விட்டாரா? என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர், நான் சீனியர் வீரராக இருக்கும்போது, புதிய வீரர்களிடம் இதுபோன்றுதான் செய்தேன். பின்னர், எந்தவொரு மனிதரிடமும் அவரைப் பற்றி தெரிவதற்கு முன் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். நான் முதன்முறையாக அணியில் இணையும்போது மிகவும் வெட்கப்பட்டேன்’’ என்றார்.

சச்சின் தெண்டுல்கர் – சேவாக் ஜோடி இந்திய அணிக்காக 93 ஒருநாள் போட்டியில் இணைந்து விளையாடி 3919 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 42.13 ஆகும். இதில் 12 சதம், 18 அரைசதம் ஆகும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment