இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!?

உலகநாயகன் கமலஹாசன் நடித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இபபடத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயத்தில் மாபெரும் வெற்றியடைந்தது.. இப்படத்தில் ஊழல், லஞ்சம் கண்டு கோபப்படும் சுதந்திர போராட்ட தியாகியாக கமல் நடித்து கலக்கி இருப்பார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார். அதிலும் நடிகர் கமலஹாசனே நடிக்க உள்ளதாக கூறினார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை முடித்த பிறகு, இந்தியான் 2 படத்தின் வேலைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. தற்போது வந்த தகவலின் படி இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உறுதியான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். source : CINEBAR

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment