இடைத்தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு சரிவு..!!

அமெரிக்காவில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில்  ட்ரம்பின் குடியரசுக் கட்சி சரிவை சந்தித்துள்ளது. ஆனால் செனட் சபையை குடியரசுக் கட்சி தக்க வைத்துள்ளது.அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடத்து முடிந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில்  உள்ள செனட் (100 உறுப்பினர்கள்) மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு (435 உறுப்பினர்கள்) தேர்தல் நேற்று நடந்தது.பதவிக்காலம் முடிவடைந்த பிரதிநிதிகள் சபைக்கும். செனட்டின் 435 உறுப்பினர்கள் பதவிக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணும் பணி நடந்தது. அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில், இம்முறைதான் அதிகளவு வாக்குப்பதிவு நடந்திருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதில், சென்ட் சபையை குடியரசு கட்சியினர் தக்க வைத்து கொண்டனர். ஜனநாயக கட்சிகள் வசம் பிரதிநிதிகள் சபை, வந்தது. குடியரசு கட்சி வசம் இருந்த 10 உறுப்பினர் இடங்கள் ஜனநாயக கட்சி வசம் வந்தது. தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. நடந்து முடிந்த இடைத் தேர்தலில்களில் இம்முறைதான் அதிக அளவிலான எண்ணிக்கையில் வாக்கு பதிவு நடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதையை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம்படி, ஜன நாயக கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன்  வெர்ஜினியா,  புளோரிடா போன்ற மாகணங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் சமீப காலமாக நடந்து கலச்சார பிரச்சனை, இனவெறி, குடியுரிமை பிரச்சனைக் போன்றவை காரணமாக ட்ரம்பின் மீது அவரது குடியரசுக் கட்சி மிது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலாக இந்த பிரதிநிதிகளுக்கானஇடைத் தேர்தலில்  ட்ரம்பின் குடியரசுக் கட்சி சிறிய சரிவைச் சந்தித்துள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் விமர்சித்துள்ளன.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment