ஆர்எஸ்எஸ் ஒவ்வொரு மத்திய அமைச்சரின் பின்னாலும் இருக்கிறது…!

 ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒவ்வொரு மத்திய அமைச்சரின் பின்னாலும் ஒரு ஆர்எஸ்எஸ் இருக்கிறது என  தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வருகிற மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஹாசன், துமக்கூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சார வாகனம் மூலம் கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரித்தார். துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்துக்குச் சென்று 111 வயதான சிவக்குமார சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.பின்னர் அங்குள்ள சாலையோரக் கடையில் ராகுல் காந்தி மாசால் தோசை சாப்பிட்டார்

இதையடுத்து மாலையில் மாகடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு மிக வேகமாக வளர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் செயல்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் நாட்டில் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் அமர்ந்துகொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். இதே போல ஒவ்வொரு மத்திய அமைச்சரின் பின்னாலும் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் இருக்கிறார். அமைச்சரின் அலுவலகத்தில் போய் அமர்ந்து கொண்டு ஆர்எஸ்எஸ்காரர்கள் அமைச்சர்களுக்கு ஆணை பிறப்பிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் மேற்பார்வையில்தான் ஒட்டுமொத்த இந்திய அரசின் செயல்பாடுகளும் நடக்கின்றன.

ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் தலையீட்டின் காரணமாகவே இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வங்கி கட்டமைப்பு வரலாறு காணாத வகையில் உருக்குலைந்துள்ளது. நீரவ் மோடியில் தொடங்கி பியூஸ் கோயல் வரை மோசடி விவகாரங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லாத நிர்வாகம் வேண்டும் என உயரதிகாரிகள் கூறுகிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு இல்லாத ஆட்சியை உருவாக்கப்படும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு இல்லாத நிர்வாகத்தை உருவாக்கப்படும். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு இல்லாததாலே, மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மோடியும், எடியூரப்பாவும் சிறப்பாக நிர்வாகத்தை சித்தராமையாவிடம் கற்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment