ஆய்வில் அதிர்ச்சி தகவல்!இந்தியாவில் ​நிலத்தடி நீரில் அதிகரிக்கும் யுரேனியம்!நோய் பரவ வாய்ப்பு

விஞ்ஞானிகள் இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக  கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக இருக்கும் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு பரவலாக அதிகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, குடிநீரில் யுரேனியத்தின் அளவாக உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யுரேனியக் கலப்பு அதிகரிப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment