ஆக்ரோசம் நிறைந்தாக மாறிய அடிலெய்டு…!ஆக்ரோச நாயகனின் அசத்தல் வெற்றி..!கிரிக்கெட் கடவுள் பாராட்டு..!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அடிலெய்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது.இதில் இரு அணிகளும்  ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று அக்ரோசம் காட்டி விளையாடிய இந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  அபார வெற்றி இந்திய அணி வரலாறு படைத்து சாதித்துள்ளது.

இந்த சாதனையை இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில் அதாவது ஆஸ்திரேலிய நாட்டு மண்ணில் 
இந்திய தனது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்ததுள்ளது. இது சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் அடிலெய்ட் மைதானத்தில்
இந்திய அணி வெற்றியை சுவைத்துள்ளது ருசித்துள்ளது. 


ஏன் இத்தனை கொண்டாட்டம் என்றால் இதுவரை ஆஸ்திரேலிய நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் அதுவும் முதல் போட்டியில் இந்திய வெற்றியை பெற்றதே இல்லை என்று இருந்த நிலையை உடைத்து கோலி தலைமையிலான இந்திய படை வரலாற்றில் மாற்றி எழுதியுள்ளது. இந்த போட்டியின் முலம்  தென்னா ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் டெஸ்ட் போட்டியில் மற்ற நாடுகளுக்கு ஆட்டம் காட்டிய அதாவது வெற்றி பெற்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த முதல் இந்திய வீரர் கேப்டன் விராட் கோலி என்ற சாதனையை தட்டி சென்றார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் உலகில் இந்த தருணம் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.மேலும் பல சாதனைகள் தற்போது படைத்து வரும்  இந்திய அணிக்கு இந்திய முன்னாள்,இன்னாள் கிரிக்கெட்  வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு கிரிக்கெட்டின் கடவுள்  சச்சின் டெண்டுல்கரின் தனது ட்விட்டர் பதிவில் ஒருடெஸ்ட் தொடரை எவ்வாறு தொடங்க வேண்டும் என்று இந்திய அணி காட்டியதுள்ளது. இந்திய அணி கடைசி வரைக்கும் தம் எதிரணிக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்தது மற்றும் புஜாரா இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவின் 4 பவுலர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை அளித்தனர்.இந்த டெஸ்ட் கடந்த 2003-ம் ஆண்டு நடந்தவைகளை நினைவு படுத்திவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Image result for kohli




author avatar
kavitha

Leave a Comment