அல்சர் பிரச்சனையா! சரியாக இதை செய்யுங்கள்..,

தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் .Image result for அல்சர் பிரச்சனையா

இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை ஏற்படுத்துகிறது.

சித்த மருத்துவத்தில் உள்ள பலன்கள்:

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.Image result for ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

உணவில் சேர்க்க வேண்டியவை:
Image result for கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி,
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர், இள நுங்கு போன்றவை சேர்க்க வேண்டும்.
கட்டுபாட்டில் வைக்க வேண்டியவை:
Image result for கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி,
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

தினமும் சரியாக  வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment