அரபு நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு புத்தாண்டு முதல் 5% VAT வரி விதிப்பு!

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய்  சுற்றுலா பயணிகளுக்கு எதிர்வரும் புத்தாண்டு முதல் வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை ஐக்கிய அரபு நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. அரபு நாடுகளில் எண்ணை வளம் குன்றிவருவதன் எதிரொலியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம்  திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள், வாகன வாடகை ஆகியவற்றிற்கு 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளில் பயணிப்போர்களின் செலவினத்தை 6 முதல் 7 விழுக்காடு அதிகரிக்கும் என்று சுற்றுலா முகவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை ஈடு கட்டுவதில் சரியான முடிவை எடுத்துள்ள துபாய் உள்ளிட்ட நாடுகளின் முடிவு மற்ற நாடுகளை வியப்பை ஏற்படுத்தியுள்ளது…

source: dinasuvadu.com

Leave a Comment