அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு-தமிழக மக்கள் எதிர்ப்பு

பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் மதுரை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலும் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருவண்ணாமலை அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் சுமார் ஆயிரக்கணக்கானோர் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயிலின் முன்பாக நின்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு இந்த கட்டண உயர்வினை திரும்பப்பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment