அரசு அதிகாரிகளால் ஆறாயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்க்கு ஆப்பு…!!! அரசியல்வாதியா?…!!! அரசு அதிகாரியா?…!!! பொதுமக்கள் பரிதவிப்பு…!!!

கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள சீர்மிகு திட்டங்களுள் ஒன்றான , ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்ட நதிகள் சீரமைப்பு கழகம் உயர் அதிகாரிகளின்  மெத்தனத்தாலும், கவனக்குறைவலும்,தங்களுக்குள் நடக்கும் அதிகர போட்டியாலும், வேலையால் முடங்கி போய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த கழகத்தில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, மாநில நீர்வள மேலாண்மை முகமை இணைக்கப்பட்டுள்ளது.

Image result for நீர்வள ஆதாரம்

இந்த கழகத்தின் மூலம் நீர்வளத்துறையில் மத்திய அரசு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதியுதவியின் மூலம் 2 ஆண்டுகளில் ₹6 ஆயிரம் கோடி செலவில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் கழக தலைவராக  டான்சி மேலாண்மை இயக்குனர் விபு நய்யார் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.இதை தொடர்ந்து, அவர், நீர்வளநிலவள திட்ட அதிகாரிகள் துணையுடன் கர்நாடகா மாநிலங்களில் நதிகள் சீரமைப்புகள் கழகம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு, ஆந்திராவில் கழகத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்து இருந்தார்.இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் உள்ளது போன்று நதிகள் சீரமைப்பு கழகத்திற்கு தனியாக வட்டங்கள், கோட்டங்கள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும், அந்த வட்டங்கள், கோட்டங்களுக்கு பொறியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு சார்பில் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Image result for நீர்வள ஆதாரம் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு

இதற்கிடையே பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த கழகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும், உயர் அதிகாரிகள் சிலரே இந்த கழகம் அமைப்பதற்கு எதிராக அரசு அதிகாரிகளே இத்தகைய  வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த கழகம் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், கழகம் அமைத்து 3 மாதங்களில் மூடு விழா நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், கூறும் போது, ‘கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உலக வங்கி, நபார்டு வங்கியின் நிதியுதவியை பெற வசதியாக நதிகள் சீரமைப்பு கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நதிகள் இணைப்பு திட்டம், புதிய தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் இது போன்று கழகம் அமைப்பதே பெரும் சிக்கல் உள்ளது.

 

 

Related image

இதனால், தான் எந்த திட்ட பணிகளையும் தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை. உயர் அதிகாரிகள் சிலர் தங்களது சொந்த நலனுக்காக கழகம் அமைப்பதை எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற அதிகாரிகளை இனம் கண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என தமிழக மக்கள் புலம்பித்தவிக்கின்றனர்.

DINASUVADU.

author avatar
kavitha

Leave a Comment