அமெரிக்க நிறுவனம் யோசனை! இந்திய ராணுவத்திற்காக பிரத்யேக போர்விமானங்கள் ……..

அமெரிக்கா மற்றும் இந்திய இடையே பல்வேறு இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்காக பிரத்யோக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க நிறுவனம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது  …
Image result for F-35 INDIA
இந்தியாவின் தேவைகளுக்கேற்ற வகையில் பிரத்யேக போர்விமானங்கள் தயாரிப்பது தொடர்பான யோசனையை அமெரிக்க நிறுவனமான லூக்ஹீட் மார்டின்    (Lockheed Martin) வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 5ம் தலைமுறை போர் விமானங்களான F-22 மற்றும் F-35 விமானங்களில் உள்ளது போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் இந்தியாவுக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் தலைவரான விவேக் லால் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ தேவைகளுக்கு விமானங்கள் தயாரிப்பது மட்டுமின்றி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் விமானங்களை விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என  லூக்ஹீட்   (Lockheed) நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment