அமெரிக்க தேர்தல்…4 இந்தியர்கள் வெற்றி…அதில் 2 தமிழர்கள்…!!

அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 2 தமிழர்கள் உள்பட 4 இந்திய வம்சாவளியினர் வெற்றிபெற்றனர்.

அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பலர் போட்டியிட்டனர். இருப்பினும் ஏற்கனவே அங்கு பிரதிநிதிகள் சபை எம்.பி.க்களாக இருந்து வந்த 4 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. அவர்கள் 4 பேரும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 45), இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் பிறந்த தமிழரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி ஜே.டி. திகான்வ்கெரை தோற்கடித்தார்.

பிரமிளா ஜெயபால் (53), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். சென்னையில் பிறந்த இந்த தமிழ்ப்பெண், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லரை வீழ்த்தினார்.

ரோகன்னா (42) கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரான் கோஹெனை வீழ்த்தி வெற்றி கண்டார்.

அமி பெரா (53). கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ பிராண்டை தோற்கடித்தார். அமி பெரா தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment