அமெரிக்காவிற்கு தற்காலிக நிதியளிக்க செனட் சபை ஒப்புதல்!

அமெரிக்காவை முடக்கிய ‘ஷட்டவுனுக்கு’ வந்தது தீர்வு அளிக்கும் விதமாக  தற்காலிக நிதியளிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது.அதன்படி 2018-ம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது.அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான (அக்டோபர் முதல் செப்டம்பர்) பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை. அமெரிக்காவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என, ஜனநாயகக் கட்சியினர் கோரி வருகின்றனர். ஆனால், அதற்கு ஆளும் கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர மறுத்தனர்.
Image result for american senate building INSIDE 2018
ஏற்கெனவே 3 முறை குறுகிய கால செலவின மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், 4-வது முறையாக குறுகிய கால செலவின மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பிரதிநிதிகள் அவை ஒப்புதல் வழங்கியபோதிலும் செனட் அவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.
இதனால் கடந்த 20-ம் தேதி முதல் அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது. பெரும்பாலான துறைகள் மூடப்பட்டுள்ள. எனினும் அத்தியாவசிய தேவைகளான ராணுவம், போலீஸ், அஞ்சல் சேவை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைகள், வரிவிதிப்பு, மின் உற்பத்தி ஆகிய துறைகள் மட்டுமே இயங்கின. அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டது. இடைக்கால ஏற்பாடாக, தற்காலிக செலவினங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 81 பேரும் எதிராக 18 பேரும் வாக்களித்திருந்தனர்.
பிரதிநிதிகள் அவையில் 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றிருந்தது. மசோதா அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்த இடைக்கால செலவின மசோதா பிப்ரவரி 8-ம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது. நீண்ட செலவின மசோதாவுக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment