அதிமுக நிர்வாகியின் சாதி வெறி.. தலித் மக்கள் பாதையை வேலி அமைத்து மறைத்தார்…!!

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் தலித் மக்களின் வழித்தடப் பாதையை மறித்து ஆளும்கட்சி பிரமுகர் கம்பி வேலி அமைத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி அலகுமலை கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து திடீரென கம்பி வேலி அமைத்தனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.  இது பற்றி தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், செயலாளர் ச.நந்தகோபால், துணைச் செயலாளர் ஜி. சம்பத், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவை தலைவர் அ.சு.பவுத்தன் ஆகியோர் வியாழனன்று நேரில் சென்று அதைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர், அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதில் ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட கான்கிரீட் சாலையை உடைத்து சேதப்படுத்தி, வழித் தடத்தை மறித்து போடப்பட்ட தீண்டாமை வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். மக்களின் பல்லாண்டு காலப் பயன்பாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது. தனிநபர்கள், அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி, தலித் மக்கள் மீது தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்துவதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு கண்டிப்பதோடு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment