அடடே… காளானில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

அடடே… காளானில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

mushroom

காளான் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தக்கூடியதும் கூட. இப்போது காளானின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

கொழுப்பு :

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது.

புண்களை ஆற்ற…!

காளானில் உடலுக்கு அவசியமான பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. ஆறாத புண்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் காளானில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் பி, டி, இ ஆகியவை உள்ளன.

இரத்தத்தை சுத்தப்படுத்த…!

காளான் எரிட்டினைன் என்னும் கொழுப்பு பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற  அனுப்பி உடலை ஆரோக்கியமாக்குகிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலம் அடைந்து நன்கு சீராக செயல்படுகிறது.

இதய நோய் :

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணம் ஆகும். மேலும் மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

காய்ச்சல் பாதிப்பு :

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் சீராகும். காளானை முட்டைகோஸ், பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் போன்றவை குணமாகும்.

பாலூட்டும் தாய்மார்:

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டது என்பதால், பாலூட்டும் தாய்மார்கள் காளான் உண்பதை தவிர்க்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *