அடக்கொடுமையே..கணவரை காணவில்லை..னு..புகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவல்..! கையும்களவுமாக சிக்கியது எப்படி?

அடக்கொடுமையே..கணவரை காணவில்லை..னு..புகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவல்..! கையும்களவுமாக சிக்கியது எப்படி?

  • திருச்சி அருகே கணவரை காணவில்லை என்று ஒரு பெண் புகார் அளிக்க வந்துள்ளார்
  • புகார் அளிக்க வந்தவரை மயக்கி குடும்பம் நடத்தியாக தலைமைக்காவல் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சிராஜுநிஷா என்பவரின் தம்பி முகம்மது ஜக்ரியா இவர் ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். சில தினத்திற்கு முன் மனைவியை கைவிட்டு வேற ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவாகி விட்டதாக அக்கம்பக்கதினர் கூறுகின்றனர்.

காதல் திருமணம் நடைபெற்றதால் அப்பெண்ணுடன் சிராஜுநிஷாவுக்கு எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தம்பியைக் காணவில்லை என்று சிராஜுநிஷாவும்,தன் கணவரைக் காணவில்லை என்று காதல் திருமணம் செய்து கொண்ட அப்பெண்ணும் தனித்தனியாக புலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களின் குடும்ப பிரச்சனையை விசாரித்து வந்த புலிவலம் காவல்நிலைய தலைமைக் காவலர் ராமருக்கு  எப்படியோ சகோதரனின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நெருக்கத்தை அறிந்த சிராஜுநிஷா காவலருக்கும் அந்த பெண்ணுக்குமான நெருக்கத்தை அறிந்து கொண்டு அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க காத்திருந்தார்.

சனிக்கிழமை நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டு வாசலில் ராமரின் இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை கவனித்த சிராஜுநிஷா தாமதிக்காமல் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டார் அங்கு வந்த உறவினர்கள் முன்னிலையில் வீட்டின் கதவைத் திறந்துள்ளனர்.உள்ளே இருந்த கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் தலைமைக் காவலர் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். காவல் நிலையத்திற்கு கணவரைக் காணவில்லை என புகார் அளிக்க வந்த பெண்ணிண் கணவன் போலவே மாற எண்ணிய தலைமைகாவலர் செயலை பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube