அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை!

இந்திய பார் கவுன்சில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன  தீர்மானத்தில் கையெழுத்திடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், வழக்கறிஞர்களாக இருந்து கொண்டே நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ள பார்கவுன்சில், அந்த  தீர்மானத்தில் கையெழுத்திடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி வழக்கறிஞராக தொடர முடியாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் வரும் திங்கள் அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதே போல் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றத் தடை கோரி பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் பார் கவுன்சில் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றத் தடை இல்லை என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment