அஇஅதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக்கிய செல்வி ஜெ.ஜெயலலிதா…!!

எல்லோருடைய பிறப்பும் வரலாறாக மாறுவதில்லை. ஆனால் வரலாற்றுக்காய் பிறந்தவர்கள் மக்கள் மனங்களை விட்டு மறைவதில்லை. அப்படி என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் கொலுவீற்றிருக்கும் தங்கத் தாரகையின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்…
கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில், மேல்கோட்டை என்ற ஊரில் 1948-ம் ஆண்டு, பிப்ரவரி 24-ம் நாள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தார் அம்மா.3 வயதுக் குழந்தையாக இருந்தபோது அவரது தந்தையார் ஜெயராம் மறைந்தார், வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள தாயார் சந்தியா திரைத் துறையில் கால்வைத்தார்.
பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்த அவர், தொடர்ந்து வந்த திரைப்பட அழைப்புகளால் 1964ல் தனது முதல் படமான ’வெண்ணிற ஆடை’யில் நடித்தார்.இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் கதாநாயகியாகவும், தமிழின் முதல் இட கதாநாயகியாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 1968ல் மட்டும் அவர் 21 படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
1980ல் முழுவதுமாக திரைப்படங்களில் இருந்து விலகி அரசியலுக்கு வந்தார். கதாநாயகியாக அம்மாவின் நூறாவது படம் திருமாங்கல்யம், நிறைவுப் படம் நதியைத் தேடிவந்த கடல்.
1981ல் அஇஅதிமுகவில் இணைந்தார் அம்மா. தனது அயராத பணிகளால் 1983-லேயே அஇஅதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரானார். 1984ல் அஇஅதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
1987ல் புரட்சித் தலைவரின் மறைவை அடுத்து, ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளித்து கட்சியின் பொதுச்செயலாளரானார் அம்மா.1989ல் எதிர்க்கட்சித் தலைவராகவும், 1991ல் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்று வரலாற்று சாதனை செய்தார்.
2016-ம் ஆண்டு மே 23-ம் தேதி அன்று 6ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதன் மூலம் தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வராக இருந்தவர் என்ற சிறப்பையும் தனதாக்கிக் கொண்டார் அம்மா.
அதிமுகவை எதிரிகளிடம் இருந்து மீட்டு இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக்கியவர், தமிழகத்தை தாழ்வில் இருந்து மீட்டு இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியவர், மக்களைத் தவிக்கவிட்டு டிசம்பர் 05, 2016 அன்று இம்மண்ணில் இருந்து மறைந்தார்.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment