ஹாரிஸ் ஜெயராஜ் இஸ் பேக்! கார்த்தி நடிக்கும் தேவ் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டிற்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்தளவிற்கு அவரது பாட்டுகளும் பெரிய அளவில் ரசிக்கும்படி அமைந்து இருக்கும். ஆனால் சமீப காலமாக அவரது பாட்டுக்கள் எதுவும் வராமல் இருந்தது. அதனை தற்போது கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படம் பூர்த்தி செய்யும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். பைக் ரேஸ் பற்றி இந்த கதை உருவாகி வருகிறது. இதன் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இதன் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான முதல் பாடலை இம்மாதம் 14இல் வெளியாகும் என அறிவித்துள்ளது.

source : cinebar.in