வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்..!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்.

அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருந்ததால் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்தவர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்காருக்காக காத்திருக்காமல் படிப்பாதை வழியாக இறங்கிச்செல்லவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
kavitha

Recent Posts

இன்றுடன் தபால் வாக்கு நிறைவு! நாளை பிரச்சாரம் ஓய்வு! இறுதி கட்டத்தில் மக்களவை தேர்தல்!

Election2024: இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

7 mins ago

வங்கதேச தொடருக்கான மகளிர் அணியை வெளியிட்டது பிசிசிஐ!!

T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய…

12 mins ago

சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17-…

27 mins ago

கோட் படத்தில் விஜயகாந்த்! உண்மையை உடைத்த பிரேமலதா!

Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த்  AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்…

27 mins ago

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை !! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ !!

Gold Price: சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

45 mins ago

பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற…

1 hour ago