கோடை காலங்களில் பல நபர்களின் உடம்பில் இருந்து வரும் வியர்வை அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அவரின் அருகில் செல்லவே தயங்குவார்கள்.இதனை  இயற்கை முறையில் சரி செய்யலாம்.
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.Image result for lemon
தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.
சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து  வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.இவ்வாறு வியர்வை துர்நாற்றத்தை நீக்கலாம்.