Categories: இந்தியா

ரூ 4,991,00,00,000 , "மத்திய அரசின் விளம்பர செலவு"கடந்த ஆட்சியை விட 2 % உயர்வு..!!

மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.மத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர்  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை கேட்டு மனு அனுப்பி இருந்தார்.அதில் ,மோடி தலைமையிலான ஆட்சியான கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரத்திற்க்காக செலவழித்த தொகை எவ்வளவு ? என்று அதில் கேட்டிருந்தார்.அதற்க்கு தற்போது பதிலளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ” கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018_ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு இந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வரையில் மின்னணு ஊடக விளம்பரத்திற்கு என்று ரூபாய் 2,208 கோடியும் ,அச்சு உடைக்க விளம்பர செலவு என்று ரூபாய் 2,136 கோடியும் மற்றும்  வெளிப்புற விளம்பரம் என்ற பெயரில்    ரூபாய் 647 கோடியும்  செலவிடப்பட்டுள்ள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மொத்த செலவு தொகை ரூபாய் 4991 கோடி ஆகும்.தற்போது எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளதால் பிஜேபி அரசுக்கு கூடுதல் சிக்கல் வந்துள்ளது.
DINASUVADU 
 

Dinasuvadu desk

Recent Posts

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…

28 mins ago

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!

Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

39 mins ago

தொகுதி மக்களிடம் தற்போதே குறைகளை கேட்டறிந்த பாஜக வேட்பாளர் தமிழிசை..!

Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…

1 hour ago

விறுவிறுப்பான வாக்குப்பதிவு… 11 மணி நிலவரப்படி தமிழக நிலவரம் இதோ….

Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…

1 hour ago

இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…

2 hours ago

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…

2 hours ago