“திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யத் தயார்” என  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் பேசிய அவர்   திமுகவினருக்கு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார் . “திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யத் தயார்” என  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும்  “ராஜினாமா செய்வதற்காகவா வீதி வீதியாக மக்களை சந்தித்து ஓட்டு வாங்கினோம்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் தி.மு.க. உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமல் கூறியிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

என்ன அழுத்தம் கொடுத்தாலும் பிரதமர் மோடி மசியப்போவதில்லை என்று தெரிவித்த ஸ்டாலின், பிரதமரை சந்திப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பதாலேயே அவரை கருப்புக்கொடியுடன் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here