மேகதாது அணை விவகாரம்…!தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது….!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியது.இதனால் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க, திமுக எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தடைந்தனர்.

இதன் பின்னர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது.அரசின் தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.