மூன்று புதிய ஜாவா பைக்குகளை அறிமுகபடுத்தி ராயல் என்ஃபீல்ஃடுக்கு நெருக்கடி கொடுக்கும் கிளாசிக் லெஜன்ட்ஸ்!!

அந்தகாலத்து இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் இந்தியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு மீண்டும் களமிறக்கப்பட உள்ளன. இந்த புதிய மாடல்கள் ராயல் எனஃபீல்டுக்கு நேரடி போட்டியாக தற்போது அமைந்துள்ளது.

இந்த புதிய  மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் ரூ.1.64 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளன. ஜாவா பெராக் என்ற பாபர் ஸ்டைலிலான கஸ்டம் மாடலுக்கு ரூ.1.89 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.

இதன் மற்ற விபரங்களை நாளை நமது கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

.