இன்று இந்த காரை புக் செய்தால் புத்தாண்டுதான் கிடைக்கும் என்றால் யாராவது இந்த காரை புக்  செய்ய முன்வருவார்களா?! ஆனால் புதிதாக அறிமுகமாக இருக்கும் சாண்ட்ரோ காரை எப்போ டெலிவெரி ஆனாலும் பரவாயில்லை என மக்கள் புக் செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23ஆம் தேதியன்று விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ காரை அதிகமானோர் புக் செய்து வருகின்றனர். புக்கிங்கானது கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முனபதிவு 22 நாட்களில் 28,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் இதற்க்கு அப்புறம் முன்பதிவு செய்பவர்களுக்கு 3 மாதம் வரை காத்திருக்கும் சூழல் உருவாகலாம். இந்த காத்திருப்பு சில மாடல்களுக்கு மட்டும் பொருந்தும்.

ஹூண்டாய் கார்களுக்குரிய முத்தாய்ப்பான டிசைன் தாத்பரியங்களுடன் வந்த ஹூண்டாய் கார் இதன் ரகத்தில் சற்று பெரிய கார் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது. பழைய சான்ட்ரோ கார் போலவே, டால் பாய் டிசைன் கான்செப்ட்டிப்ல வடிவமைக்கப்பட்டு இருப்பதால், உட்புற இடவசதியும் சிறப்பாக இருக்கிறது.

உட்புறத்தில் மிக தரமான பாகங்களுடன் கூடிய இன்டீரியர் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருந்து வருகிறது. அத்துடன், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பின் இருக்கை பயணிகளுக்காக ரியர் ஏசி வென்ட்டுகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

இந்த வகை கார்களில், இதன் விலை  3.89 லட்சமாக இருப்பதால் மற்ற கார்களான டாடா டியாகோ மற்றும் மாருதி செலிரியோ உடன் ஒப்பிட்டு பார்க்கையில் இது சிற்பபான தேர்வாக உள்ளதாால் இது வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளது.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here