ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தனின் தாயார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் தாயார் மகேஸ்வரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘ மகனின் விடுதலைக்கு பரிந்துரைத்த உங்களுக்கு எங்கள் குடும்பம் நண்றிக கடன் பட்டுள்ளது, வெகுவிரைவில் என் மகன் என்னிடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இறுதிக்கு காலத்தில் என்னை பராமரிக்க எனது மகனை எனக்கு அளிக்க கோருக்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.