முதல்முறையாக பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி…!!! பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி..!!!

இலங்கையின் நிதி நிலை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 162 ரூபாயை தாண்டியிருந்தது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங் கருத்து வெளியிட்டுள்ளார்.

” இலங்கை போன்றே ஏனைய நாடுகளிலும் டாலரின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளது. கடந்த காலத்திலும் டாலரின் மதிப்பு இவ்வாறே தாக்கத்தை செலுத்தியது. எனினும் இது தற்காலிக பிரச்சனையாகவே கருதப்படுகின்றது.” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை பிரதமர் வெளியிட்டுள்ளார். இலங்கையின் நிதிநிலை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று பாரிய வீழ்ச்சியை காட்டியது.

இதன்படி அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை 158 ரூபாய் 91 சத்தம் எனவும், விற்பனை விலை 162 ரூபாய் 11 சதாஹம் எனவும் குறிப்பிட்டிருந்தது.