திருச்செந்தூர் அருகே உள்ள   ஆத்தூர் ஆற்றுப்பாலத்தில்  இரண்டு  தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில்  15 மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அவர்கள்  சிகிச்சைக்காக  அழைத்துசெல்லப்பட்டனர்.  ஆத்தூர் காவல்துறையினர்  விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு  வர இருப்பதால்   ஆத்தூர் இருவழி பாலம் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது அதுமட்டுமில்லமால்  ஆத்தூரில் உள்ள வேகத்தடை அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது இதனால்  விபத்து ஏற்ப்படும் அபாயம் உள்ளது முதல்வர் வருகையால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையுறுகளால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்

~காஸ்ட்ரோ~