மாரி 2 வில் மலையாள நடிகர்! மிரட்டும் வில்லனாக வெளியான போஸ்டர்!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மாரி. இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் என படம் நல்ல எண்டெர்டயின்ட் மூவியாக அமைந்தது. படத்தில் காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இபபடத்தையும் பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார், தற்போது அவரின் போஸ்டர் வெளியாகி யுள்ளது. இப்போஸ்டரில் டோவினோ தாமஸ் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். படத்தில் எந்த மாதிரியான ரோலில் நடிக்க உள்ளார் என்பதும் படம் ரிலீசான பிறகு தான் தெரியும். source : CINEBAR.IN

DINASUVADU