பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கை முடித்த யாஷிகா திடீரென மயக்கம் போட்டு விழுந்ததில் பிக் பாஸ் பதட்டம் அடைந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்துக்கான் டாஸ்க் நடைபெற்று வருகிறது. ‘டிக்கெட் டூ ஃபினாலே’ என்ற டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 7 போட்டியாளர்களில் ஜனனி மற்றும் யாஷிகா மட்டும் இறுதி வரை விளையாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் நேரடியாக பிக் பாஸ் இறுதி வாரத்துக்கு தகுதி பெறவுள்ளனர்.

இந்நிலையில், கையில் தண்ணீர் கோப்பையை ஏந்தியபடி ஒருவரையொருவர் சுற்றி வர வேண்டும் என்பதாலோ என்னவோ, உடல்நலக் குறைவால் யாஷிகா திடீரென பெட்டில் மயங்கி விழும் காட்சி புதிதாக வெளியான புரொமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.