தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. போயிங் நிறுவனத்திற்கு கடும் போட்டியாளராக திகழும் ஏர் பஸ் தனது விற்பனை விவரங்களை இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், அது போயிங்கைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

போயிங் தனது போட்டியாளரான ஏர் பஸ் நிறுவனத்தை முந்துவதற்கு முக்கிய துருப்புச்சீட்டாக, 787 டிரீம்லைனர் என்ற விமான ரகத்தை கருதுகிறது. ஒவ்வொரு மாதமும் இவ்வகையைச் சேர்ந்த 12 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 350 ஜெட் ரக விமானங்கள் இதில் பாதி அளவிற்கே விற்பனை ஆகியுள்ளன.

source: dinasuvadu.com