போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய ரோப் கார்! விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் மோடி சர்கார்!!

இந்திய நகரங்களில் முக்கியமானவை மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் இங்கு தொழில் வளர்ச்சி அதிகம். ஆதலால், இங்கு மக்கள் தொகையும் அதிகமாக காணப்படுகிறது. அதனால், இங்கு வாகன நெரிசல் மிகவும் அதிகம். ஆதலால் இங்கு பலரும், பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும், அந்த மக்கள் கூட்ட நெரிசலில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நேரம் அதிகமாக செலவாகும், ஆதலால் இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் தங்களது சுய வாகனங்களையே போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இருந்தும் கூட்ட நெரிசலை விழாக்காலங்களில் சமாளிக்க அரசாங்கத்தாலேயே இயலாத சூழல் உருவாகும்.

இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மத்திய அரசு புதிய பொது போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்த பட உள்ளது. அது என்னவென்றால், பொது போக்குவரத்திற்கு ரோப்வே , கேபிள் கார், போன்ற வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பெரு நகரங்களான, மும்பை கொல்கத்தா போன்ற வடஇந்தியா பக்கம் இந்த ரோப் வே, கேபிள் கார் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இது தென்னிந்தியா பக்கம் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுமா? இல்லை இங்கு முதலில் அறிமுகப்படுத்தப்படுமா என தெரியவில்லை.

பெருநகரங்களை மட்டும் புது புது திட்டங்களாக கவனிக்கு அரசு, மதுரை, கோயம்பத்தூர் போன்ற இரண்டாம் கட்ட பெருநகரங்களையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.

DINASUVADU